இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து.இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பயணித்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் வைத்து இவ்வாறு திடீரென தீப்பிடித்துள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்த போதே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் இராஜாங்க அமைச்சருக்கோ, ஓட்டுனருக்கோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து. இராஜாங்க அமைச்சர் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து. Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.