வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார



2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் முதன்மைத் தேர்வாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது என்றார்.

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது அமைப்பு மாற்றம் மற்றும் இலங்கைக்கான புதிய மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்து வருவதாகவும், அந்த மாற்றத்தை செய்வதற்கு NPP அவர்களின் விருப்பமாக இருப்பதாகவும் கூறினார்.

சுவீடனில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு வந்து NPPக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது NPPக்கு ஆதரவை வழங்க நிகழ்நிலையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

"இலங்கையில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று அவர் கூறினார்.

எதிர்வரும் தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஒரு முக்கிய சக்தியாக இருப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அதிகாரத்தைப் பெறுவதற்கும், அதிகாரத்தைப் பெற்ற பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் NPP க்கு ஆதரவளிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

"கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றினர். அதேபோன்று அவர் மக்களின் அபிலாஷைகளை தகர்த்தெறிந்த பின்னர், கோட்டாபய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற பொதுக்கருத்தையும் அவர்கள் உருவாக்கினர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அமைப்பு மாற்றத்திற்கான பொதுக் கருத்தை தற்போது உருவாக்கியுள்ளனர். அவர்களின் முக்கிய தேர்வு இன்று NPP ஆகும்," என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் சமீபகாலமாக வேறு எந்த கட்சியாலும் இவ்வாறு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தலின் போது இலங்கைக்கு வந்து எமது கட்சிக்கு வாக்காளிக்க வேண்டும் ; அனுரகுமார Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.