நாட்டில் சராசரி இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 140,000ஆக இருந்த நிலையில் 180,000ஆக அதிகரித்தது.பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது.

அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார்
நாட்டில் சராசரி இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 140,000ஆக இருந்த நிலையில் 180,000ஆக அதிகரித்தது. நாட்டில் சராசரி இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 140,000ஆக இருந்த நிலையில் 180,000ஆக அதிகரித்தது. Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.