சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான்



எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான், ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரை சந்திக்காமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துகளுக்கு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தினை தொடரந்து கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பல நாடுகளின் வேண்டுகோளின் பிரகாரம் சஜித் பிரேமதாச ஈரான் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக பல தகவல்கள் வந்து கொண்டிருந்ததை நாம் அறிவோம்.


இந்த பிரச்சாரங்களை முன்னெடுக்கும் கூட்டத்தினரை எங்களுக்கு தெரியும். ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச ஈரான் தூதுவருடன் பேசி சந்திப்பதற்கு நேரம் கேட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தனவுடன் ஈரான் தூதரத்தை தொடர்பு கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டார்.


ஈரான் ஜனாதிபதி நான்கரை மணித்தியாலம் அல்லது எத்தனை மணித்தியாலங்களே இங்கு இருக்கப் போகிறார், இதனால் இக்குறிப்பிட்ட நேரத்திற்கு பல வேலைகள் இருப்பதால் நேரம் தருவதற்கு முயற்சி செய்வதாக ஈரான் தூதுவர் தெரிவித்தார். ஆனால் இறுதி வரை நேரம் தரவில்லை.


பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராபோசனம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அன்று காலையிலையே ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது இந்த இராபோசனத்தில் கலந்து கொள்ளுமாறு.

அன்று இரவு நடக்கும் இராபோசனத்துக்கு அன்று காலை அதுவும் தொலைபேசி அழைப்பு மூலம் அங்கு வேலை செய்யும் ஒருவர் அழைப்பு விடுக்கிறார்.


இந்நாட்டுக்கு வெளிநாட்டில் இருந்து இவ்வாறு பிரமுகர்கள் வந்தால் அதன் ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சே மேற்கொள்ளும். விருந்துபசாரங்களாக இருந்தாலும், பயணமாக இருந்தாலும், யாரை சந்திக்க வேண்டும் என்பதையெல்லாம் நிரல் படுத்துவது வெளிவிவகார அமைச்சே. இது தான் Protocol. ஆனால் ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தை வெளிவிவகார அமைச்சு ஒழுங்கு செய்யவில்லை. ஜனாதிபதி செயலாகத்தாலயே ஒழுங்கு செய்நப்பட்டிருந்தது.


அதனால் ஈரான் ஜனாதிபதியும் சஜித் பிரேமதாசவும் சந்திக்கக் கூடாது என ஜனாதிபதி செயலகத்திற்கு தேவை இருந்தது. இதனால் தான் திட்டமிட்டு சஜித் பிரேமதாச ஈரான் ஜனாதிபதியை சந்திக்க விடாமல் வேலை பார்த்தனர்.


அதனால் தான் அன்றைய இராபோசன விருந்துக்கு அன்று காலையில் தொலைபேசி வாயிழாக அறிவிக்கின்றனர். இவ்வாறான சதித்திட்டங்களை போட்டனர்.


சஜித் பிரேமதாசவிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவை சீர்குலைக்கவே இதனால் திட்டம் போட்டனர். நான் ஒன்றை தெளிவாக கூற வேண்டும். கொரோனா காலத்தில் ஜனாசா விடயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ எமது மையத்துகளை எரிக்க வேண்டும் என முடிவெடுத்த நேரத்தில், அடக்கக்கூடாது எரிக்க வேண்டும் என முடிவெடுத்த நேரத்தில், முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து பொரளை கனத்தை மயானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினோம். அந்த ஆர்ப்பட்டத்தில் எமது உரிமைகள் பாதுகாக்க சஜித் பிரேமதாச எம்மோடு கலந்து கொண்டார்.


பாராளுமன்றத்தில் தொடர்ந்து இதைப் பற்றி கதைத்தார்கள். இதைப் பற்றி பேசினார்கள். இது அநியாயம் என்று கூறினார்கள். இந்த உரிமையை பாதுகாக்க வேண்டும் என பேசினார்கள்.


ஆனால் தற்போதைய ஜனாதிபதி அன்று மௌனமாக இருந்தார்,கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இந்த விடயத்தில் ரணில் விக்ரமசிங்க மௌனமாக இருந்தார்.


கட்சித்தலைவர்கள் மௌனமாக இருந்தனர். அந்த உறவை சீர்குலைக்க சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர்.


அதுமட்டுமல்ல பலஸ்தீனம் சம்பந்தமாக ஆரம்ப நாட்களில் இருந்து சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில், பலஸ்தீனத்தில் நடந்து வரும் கொடுமை, தாக்குதல்களுக்கு எதிராக தெளிவாக பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக போராடினார்.

ஆனால் இந்த அரசாங்கம் பலஸ்தீன் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகிறது. ஒருபுறம் பலஸ்தீனத்துக்காக பணம் சேகரிக்கின்றனர், மறுபுறம் இஸ்ரோலில் தூதரகம் இருக்கத்தக்க ரணில் விக்ரமசிங்க வீசா வசதிகளை துரிதமாக வழங்க புதிய காரியாலயம் ஒன்றையும் திறக்கிறார். தூதரகமும் இருக்கிறது. தூதரகத்திற்கு பதிலாக இஸ்ரேலில் இன்னுமொரு பிரதேசத்தில் புதிய காரியாலயம் ஒன்றை ஒரு மாத்ததிற்கு முன்னர் திருந்தார்.இலங்கைக்கு துரிதமாக வருகை தரும் பொருட்டு வீசா வழங்கவே இது திறக்கப்பட்டது.


பலஸ்தீனத்திற்கு பணமும் சேர்கிறார் அதேபோல இஸ்ரேலில் வேலை செய்ய தொழிலாளர்களை இங்கு இருந்து அனுப்புகின்றனர். இஸ்ரேலில் வேலை செய்ய இந்த ரணில், ராஜபக்ச அரசாங்கம் இடம்கொடுத்துள்ளது. அது குறித்து பேசிகிறார்கள் இல்லை. இது குறித்து மௌனமாக இருக்கிறார்.


அதே போல தான் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதல் நடத்துகிறார்கள். ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்க போன்ற நாடுகள் ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்க கப்பல் அனுப்பியிருக்கிறார்கள்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி என்ன செய்தார்? அவரும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஹூதி கிளர்ச்சியாளர்களை தாக்க கப்பல் அனுப்பினார்.


இது எப்படி வெளிவந்தது ? அவர் செல்லவில்லை.


எங்களுக்கு உதவியாக இலங்கை அரசாங்கமும் கப்பல் அனுப்பி இருப்பதாக அமெரிக்கா தூதுவர் கூறினார்.


இந்த முஸ்லிம் மக்களை கவர இங்கு பணம் சேகரிக்கிறார். அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளை சந்தோசப்படுத்த ஹூதி அங்கத்தவர்களை தாக்க கப்பல் அனுப்புகிறார். இது தான் இவர்களுடைய இரட்டை வேடம். எனவே இந்த ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சம்பளம் எடுக்கக் கூடிய சில சமூக ஊடகங்களை நடத்தும், சிலர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைப் படி சஜித் பிரேமதாச மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கிடையே நிலவிவரும் சிறந்த உறவை பிரிப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான் சஜித் பிரேமதாசவை, ஈரான் ஜனாதிபதியுடன் சந்திக்க விடாமல் சதி செய்தனர் ; முஜிபுர் ரஹ்மான் Reviewed by Madawala News on April 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.