சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம்பண்டாரவளை – கஹகல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காலி பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற குழுவினர் பயணித்த வேனே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம் சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து- அனைவரும் காயம் Reviewed by Madawala News on April 13, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.