தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால்.



தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன்.
பெற்றோர் சகிதம் எங்கு சென்றாலும் உரிய நேரத்தில் தொழுதுவிட துடிக்கும் சிறுவன்.
இன்றைய கால கட்டத்தில் இவ்வாறான சிறுவர்களை காண்பதே அரிது.
எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ஏனைய சிறுவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் அமைய வேண்டும் என்பதற்காகவும் ,இச் சிறுவனுக்காக துஆ செய்யுங்கள் என்பதற்காகவுமே இப்பதிவு.

புனித நோன்பு காலத்தில் ஐவேளை தொழுகை மாத்திரமல்ல, தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் தொழுகைகளை நேரம் தவறாது முழுமையாக நிறைவேற்றிய ஏறாவூரை சேர்ந்த 09 வயதுடைய சிறுவன் முஹம்மது மிஷால்.


ஏறாவூர், காதியார் வீதியை பிறப்பிடமாக கொண்ட றஹ்மதுல்லாஹ் றிகாசா தம்பதிகளின் மூத்த புதல்வனான இவர், ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

இச் சிறுவன் ஐங்காலத் தொழுகைகளை தனது வீட்டுக்கு அருகாமையிலுள்ள ஸாவியா மஸ்ஜிதில் நிறைவேற்றி வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
சிறுபிள்ளைகளுக்கான பொழுது போக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்த்து அமல்களிலும் ,கற்றலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றார்.

அல்ஹம்துலில்லாஹ்!

சென்ற நோன்பு மாதம் பெரியோர்கள், இளைஞர்கள் கூட உரிய நேரத்திற்கு தொழுகைக்கு வரத்தவறினாலும், இச் சிறுவன் மாத்திரம் பாங்கு சொன்னவுடன் வுழுவுடன் மஸ்ஜிதுக்கு வந்து, முஅத்தினாருக்கு அருகிலேயே நின்று இமாம் ஜமாஅத்துடன் இணைந்து கொள்வார்.

அதுமாத்திரமல்லாமல் நோன்பு காலங்களில் நடைபெறும் இரவு வணக்கமான தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் போன்ற தொழுகைகளிலும் ஆரம்பத் தக்பீரிலிருந்து அனைத்து ரக்கஅத்துகளும் தொழுது ஸாலாம் கொடுத்து, துஆ செய்துவிட்டே வீடு செல்வார்.

இச் சிறுவனின் தொடரான அமல்களை அவதானித்து வந்த ஜமாஅத்தார்கள், இச் சிறுவனைப்பற்றி கதைக்காத நாட்களே இல்லை.

நோன்பு பெருநாளைக்கான பிறை பற்றிய தகவல் கிடைக்காததால், அன்றைய தினமும் உரிய நேரத்திற்கு பள்ளிவாசலுக்கு சமூகமளித்து தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, "நாளை நோன்பு பெருநாள் " என்று அறிவிக்கப்பட்டதும், ஜமாஅத்தார்கள் ஒன்றுசேர்ந்து இச் சிறுவனை கட்டியனைத்து முஷாபஹா செய்து, தக்பீர் சொல்லி இச் சிறுவனை கௌரவித்த விடயம் உண்மையில் கண்களை கசியவிட்டது.

பெற்றோர் சொல் கேளாத பிள்ளைகள், பள்ளிவாசலுக்கு செல்கிறோம் என பெற்றோரிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றித்திரியும் பிள்ளைகள், பள்ளிவாசலில் கொடுக்கும் தேனீருக்காக தொழுகையின்றி காத்துக்கிடக்கும் பிள்ளைகள் வரிசையில் இச் சிறுவன் மாத்திரம் விதிவிலக்காக அமல்களுக்கே முக்கியம் கொடுத்திருக்கிறான் என்றால் அல்லாஹ் உதவியால் இச் சிறுவனின் பெற்றோரும் கௌரவத்துக்குரியவர்களே.

அல்ஹம்துலில்லாஹ்!

(ஏறாவூர் நஸீர்)
தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.