இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர்கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்தர கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாக க.பொ.த. உயர்தரக் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம், பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்காக தோற்றும் 2 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர்.

இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

அதற்கான இட முகாமைத்துவமும் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.

தற்போது கல்வியில், முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்


இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர் இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர் Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.