BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால் கொரியா செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டு காணாமல் போன 8 ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் மீட்பு.



தமிழகம் -  கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் மூன்று மாணவிகள், கடந்த 4ம் திகதி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.


முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமெராக்களை,பொலிஸார் ஆய்வு செய்தனர்.


இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து  காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.


​​அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பி.டி.எஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்சியில்  ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால் கொரியா செல்லும் முயற்சியில் ஈடுப்பட்டு காணாமல் போன 8 ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் மீட்பு. BTS இசைக்குழு மீதான ஆர்வத்தால் கொரியா செல்லும் முயற்சியில்  ஈடுப்பட்டு காணாமல் போன   8 ஆம் வகுப்பு மாணவிகள் மூவர் மீட்பு. Reviewed by Madawala News on January 08, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.