ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது... காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர். ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்ஜோன்டிலரி தோட்டத்தில் இருந்து நியூவெளி​யை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


காயமடைந்த பொலிஸாரை அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் காப்பாற்றி, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது... காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர்.  ரோந்து சென்ற பொலீஸாரின் ஜீப் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது...  காயமடைந்த மூவரை மக்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர். Reviewed by Madawala News on June 07, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.