சினம்கொண்ட சிங்கம் .... 🇱🇰 மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிாிக்கெட் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை, சூாியவெவ மைதானத்தில் இடம்பெற்றது .
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவா்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சாா்பில் மொஹமட் நபி அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டாா்.
பந்துவீச்சில் இலங்கை அணியின் துக்ஷ்மந்த சமீர 4 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினா்.
இந்த ஒருநாள் கிாிக்கெட் தொடாில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்றன.
எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்த நிலையில் ,
பதிலுக்கு துடுப்ப்டுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கட் இழப்புக்கு 119 ஓட்டங்களை பெற்று இலகு வெற்றியை பெற்றது.

No comments: