வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும்.



வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் .

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும். Reviewed by Madawala News on June 01, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.