முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன விபத்தில் உதவி காவல்துறை அதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிரிழந்த உதவி காவல்துறை உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக காவல்துறை முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் காவல்துறை உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஸ்ரீ ரங்கா காவல்துறையினரால் கைது.
Reviewed by Madawala News
on
March 17, 2023
Rating:

No comments: