மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ; மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர



மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
சமீபத்தில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பிறகு CEB க்கு மாதாந்தம் சுமார் 35 பில்லியன் சேர்க்கப்படுகிறது .

ஆனால் ஜனவரி மாதத்தில் மட்டும் மின்சார விநியோகத்திற்கான நிலக்கரிக்கு 38.45 பில்லியன் தேவை உள்ளது.


மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும், அதன் பிறகு செப்டம்பர் வரை நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.


மேலும், உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கைக்கு மேலதிகமாக 5 பில்லியன் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில் தற்போது அதனை வழங்க முடியாது.


“கட்டண திருத்தம் என்பது அரசாங்கமோ அமைச்சரோ எடுக்கக்கூடிய கடினமான முடிவாகும். நாங்கள் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.
மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ; மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ;  மின்சக்தி -  எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.