முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் . விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் ,,இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.


வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தினை அமுல்படுத்தினால்தான் இந்த நாட்டில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.


எனவே விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், சமூக சீர்திருத்தங்களில் இலங்கை இறங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் இஸ்லாமிய பெண்களின் திருமண வயதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் . விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் ,, முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் . விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் ,, Reviewed by Madawala News on December 02, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.