பாடசாலை மாணவி ஒருவரிடம் இருந்து கருத்தடை மாத்திரைகள் மீட்பு ... விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக்  கூறப்படும் சம்பவம் தொடர்பில்  ஆசிரியர் ஒருவரை பன்னல பொலிஸார் சந்தேகத்தில்  கைது செய்துள்ளனர்.


பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் குளியாபிட்டிய நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


தங்கொட்டுவ, வென்னப்புவ மற்றும் மாகந்துர போன்ற பல பிரதேசங்களில் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கும் 24 வயதுடைய ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரிடம் கருத்தடை மாத்திரைகள்  காணப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்த போது அதன் தொடர்ச்சியாக  ஆசிரியர்  ஒருவரும்  கருத்தடை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்

பாடசாலை மாணவி ஒருவரிடம் இருந்து கருத்தடை மாத்திரைகள் மீட்பு ... விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின.   பாடசாலை  மாணவி ஒருவரிடம் இருந்து  கருத்தடை மாத்திரைகள்  மீட்பு ...  விசாரணையில்  பல தகவல்கள்  வெளியாகின. Reviewed by Madawala News on December 02, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.