சக்திவாய்ந்த கைக்குண்டை காண்பித்து மிரட்டி கொள்ளைச் சம்பவங்களில் நீண்ட நாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேயனோடையில் சக்திவாய்ந்த கைக்குண்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.றஹீம் தெரிவித்தார்.


காங்கேயனோடை பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட நபர்களே இவ்வாறு கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதான நபர்களிடமிருந்து கையடக்க தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபாய் பணம்,வாசனைத் திரவியங்கள் உட்பட வீட்டு பாவனைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இப்பிரதேசத்தில் கைக்குண்டைக் காண்பித்து மிரட்டி கொள்ளைச் சம்பவத்தில் நீண்ட நாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

 ரீ.எல்.ஜவ்பர்கான் TM 

சக்திவாய்ந்த கைக்குண்டை காண்பித்து மிரட்டி கொள்ளைச் சம்பவங்களில் நீண்ட நாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது. சக்திவாய்ந்த கைக்குண்டை  காண்பித்து மிரட்டி கொள்ளைச் சம்பவங்களில்  நீண்ட நாட்களாய் ஈடுபட்டுவந்த நபர்கள் காத்தான்குடி பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.