பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்துவது போன்று காலநிலை மாற்றம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட நேர்க்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
"பொருளாதார நெருக்கடியைப் பார்க்கும்போது, நாம் நிச்சயமாக காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது..
ஏனெனில் இன்றைய பொருளாதாரமும் பருவநிலை மாற்றமும் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
அதேபோல் பொருளாதார வளர்ச்சியும் இருக்க வேண்டும். நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எங்கள் பொருளாதாரத்தை தப்போது பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்.
அதை நோக்கிதான் இன்று உலகம் செல்கிறது. அதிலிருந்து நாம் விலக முடியாது.
இரண்டாவதாக, பசுமைப் பொருளாதாரத்தில் இலங்கை தனது உயர் ஆற்றலைப் பயன்படுத்த முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட பல துறைகளில் பசுமைப் பொருளாதாரத்தின் மூலம் இலங்கை பயனடைய முடியும்.
நாம் அந்த வழியில் முன்னோக்கி செல்ல வேண்டும்."
நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்..
Reviewed by Madawala News
on
October 14, 2022
Rating:

No comments: