களுத்துறையில் போன்று கண்டியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ''ஒன்றாக எழுவோம்'' பேரணி



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவே கட்சியின் விவகாரங்களில் பெரும்பாலான வழிநடத்தலை முன்னெடுப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுத் தலைவருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கட்சியின் விவகாரங்கள் தொடர்பில் பெசில் ராஜபக்ஷவுக்கு எவராலும் சவால் விட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக் கையில், பெசில் ராஜபக்ஷவே இக்கட்சியை ஸ்தாபித்தார். எனவே, இந்தக் கட்சியின் செயற்பாடுகளை மேற்கொள்ள பெசில் ராஜபக்ஷவுக்கு எந்த அதிகாரமும் இல்லையா? கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டும். யாருக்கும் தேவையில்லாததை பெசில் ராஜபக்ஷ முன்னெடுப்பதில்லை. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் தேவையானதையே அவர் முன்னெடுப்பார்.

அதனைவிடுத்து, ஒவ்வொருவருக்கும் விரும்பியதை இந்த கட்சி முன்னெடுக் காது. 2016 ஆம் ஆண்டு எங்களுடைய ஆடைகளை களைந்துவிட்டு வீதியில் விரட்டியடிப்பதாகக் கூறினர். ஆனால், பெசில் ராஜபக்ஷ இந்தக் கட்சியை ஆரம்பித்தார். வலுவான கட்சியாக மாற்றினார். எனவே அரசியல் ரீதியாக பெசில் ராஜபக்ஷவின் பங்களிப்பை யாராலும் மரணிக்கச் செய்ய முடியாது. சிலர் கூறுவது போன்று, பெசில் ராஜபக்ஷ, திரைக்குப் பின்னாலிருந்து கட்சியை வழிநடத்தவில்லை. அவர் திரைக்கு முன்னால் இருந்தே வழிநடத்துகின்றார். சவால்களுக்கு நாங்கள் முகம் கொடுப்போம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது இந்த நாட்டில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கின்றது. இந்த நாட்டின் நாடாளுமன்றத்தையும் நாங்கள் வழிநடத்துகின்றோம். தற்காலிகமான பின்னடைவை சந்தித்தோம். அது எங்களுடைய தவறு எனக் கூற முடியாது. போராட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தற்போது நாட்டு மக்களுக்கு தெரியவந்துள்ளது. களுத்துறையில் இருந்து புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம். 16 ஆம் திகதி கண்டிக்கு வருவோம் என்றார்.
களுத்துறையில் போன்று கண்டியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ''ஒன்றாக எழுவோம்'' பேரணி களுத்துறையில் போன்று கண்டியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ''ஒன்றாக எழுவோம்'' பேரணி Reviewed by Madawala News on October 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.