பிரமிட் திட்டத்தின் மூலம் இலங்கையில் ரூ.15,000 மில்லியனுக்கும் அதிக அளவிலான பண மோசடி.. கைதான பெரும் புள்ளிகள்.



பல்வேறு நிலைகளில் பலரை ஏமாற்றி சுமார் ரூ.15,000 மில்லியனுக்கும் அதிக அளவிலான பண மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட சீன தம்பதியரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஸ்போர்ட்ஸ் செயின் என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி அதனுடன் தொடர்புடையவர்களை ஏமாற்றிய மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் நபர்களை கவரும் வகையில் கொழும்பில் உள்ள முக்கிய ஹோட்டல்களில் மாநாடுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதித்த அரச சட்டத்தரணி ஹம்சா அபேரத்ன இது தெடர்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பிரதான சந்தேகநபரான ஷமல் பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​அவரது தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட வட்ஸ்அப் செய்தி மூலம் சீன பிரஜைகள் இருவர் தொடர்பான உண்மைகள் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் தொடர்பான உண்மைகள் இதற்கு முன்னர் நீதிமன்றில் தெரிவிக்கப்படவில்லை என சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை குற்றமாக கருத முடியாது என்றும் டிஜிட்டல் நாணயத்தின் கீழ் வரும் வேலை என்றும் இலங்கையில் விரைவில் இதனை சட்டப்பூர்வமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் மிகப்பெரிய சீன முதலீட்டாளரின் மகனான சந்தேகநபர் அவ்வாறான குற்றத்தை செய்யவில்லை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் 70 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்த ஒரு குழுவிடம் இருந்து 8,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதோடு அவர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதோடு “ஸ்போர்ட் செயின் சொசைட்டி ஸ்ரீ லங்கா” என்ற நிறுவனத்தின் தலைவர்கள் 7 பேருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பயணத் தடை விதித்துள்ளார்.
பிரமிட் திட்டத்தின் மூலம் இலங்கையில் ரூ.15,000 மில்லியனுக்கும் அதிக அளவிலான பண மோசடி.. கைதான பெரும் புள்ளிகள். பிரமிட் திட்டத்தின் மூலம் இலங்கையில்  ரூ.15,000 மில்லியனுக்கும் அதிக அளவிலான பண மோசடி.. கைதான பெரும் புள்ளிகள். Reviewed by Madawala News on October 14, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.