மினுவங்கொடயில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ பின்னணியில் பட்டம்.



மினுவங்கொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவங்கொட கமன்கெதர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.



51 வயதான தந்தை மற்றும் 23 மற்றும் 24 வயதுடைய அவரது இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன் பிணையில் வெளிவந்த 3 பேர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பட்டம் விடுதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் இதுவரை இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை 06 என தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று, இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு அப்போதை காலப்பகுதியில் தந்தை மற்றும் மகன் ஒருவர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய மற்றொரு தந்தை மற்றும் மகன் இருவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்களில் ஒருவர் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கடந்த வருடம் ஜுன் மாதம் அந்தக் கொலையின் பிரதான சந்தேக நபரான இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டிருந்த நிலையில், இன்று கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் மூவருக்கும் இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கொலைக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலைக்காக சந்தேகநபர்கள் 5 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மினுவங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இருவரின் சடலங்கள் கொலை இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மினுவங்கொடயில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ பின்னணியில் பட்டம்.  மினுவங்கொடயில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ பின்னணியில்  பட்டம். Reviewed by Madawala News on October 06, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.