இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது... சில வாகனங்களின் தற்போதைய சந்தை விலைகளும் வெளியாகின.


இலங்கையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, வாகனங்களின் விலை சடுதியாக உயர்ந்தது. பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன.


இந்த நிலையில், தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


அதிக வட்டி வீதங்கள், பணவீக்கத்தின் அதிகரிப்பு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை, விற்பனை வீழ்ச்சி  உள்ளிட்ட பல காரணிகள் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களின் விலைகளை குறைக்க உதவியுள்ளன.


கடந்த மாதம் 9 மில்லியன் ரூபாவுக்கு விற்பனையான ஹொண்டா வெசல் 2015 வகை வாகனம் இந்த மாதம் 7.5 மில்லியன் ரூபாவுக்கு விற்பனையானது.

 மேலும் 7.2 மில்லியன் ரூபாவாக இருந்த டொயோட்டா விட்ஸ் 2017 வகை வாகனம் 6.5 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. 

2008 டொயோட்டா அலியன் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டது. ஆனால், இப்போது 6 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்படுகிறது.


2020 மார்ச் மாதம் வாகன இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


இறக்குமதித் தடையை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களின் விலைகள் இரண்டு மடங்கை விட அதிகரித்திருந்தன.


சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவிகளை வழங்கிய பின்னர் 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இறக்குமதிகள் சாத்தியமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது... சில வாகனங்களின் தற்போதைய சந்தை விலைகளும் வெளியாகின.  இலங்கையில்  வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது...  சில வாகனங்களின் தற்போதைய சந்தை விலைகளும் வெளியாகின. Reviewed by Madawala News on October 10, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.