பாகிஸ்தான் ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் .. உணவக முகாமையாளரை கைது.



பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல்களில் அசிட் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த செப்டம்பர் 27 அன்று பாகிஸ்தானில் ஒரு பிரபல உணவகத்தில் பிறந்தநாள் விருந்து நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சிறுவர்களுக்கு தண்ணீர் போத்தல் வழங்கப்பட்டபோது அதில் தண்ணீருக்குப் பதில் அசிட் இருந்தது பின்னர் தெரிந்தது.


“ஊழியர்கள் விநியோகித்த தண்ணீர் போத்தலைக் கொண்டு என் மருமகன் கைகளைக் கழுவினான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் அழத் தொடங்கினான். அப்போதுதான் அமிலம் பட்டு அவன் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது தெரிய வந்தது” என்று பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர் ஒருவர் கூறினார்.

அதுபோல மற்றொரு தண்ணீர் போத்தலில் இருந்த அசிட்டை குடித்ததால் அவரது இரண்டரை வயது மருமகள் வஜிஹா வாந்தி எடுத்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி இருவருக்கும் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் உணவக முகாமையாளரை கைது செய்துள்ளனர்
பாகிஸ்தான் ஹோட்டலில் தண்ணீருக்கு பதில் ஆசிட் .. உணவக முகாமையாளரை கைது.  பாகிஸ்தான் ஹோட்டலில்  தண்ணீருக்கு பதில் ஆசிட் .. உணவக முகாமையாளரை கைது. Reviewed by Madawala News on October 05, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.