நிந்தவூரில் போதைப் பொருள் பாவனை 50 வீதம் வரை குறைவடைந்தது.



(நூருல் ஹுதா உமர்)

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் மற்றும் புகையிலை பாவனையில் 50 வீதம் வரை தற்போதைக்கு குறைவடைந்துள்ளதாக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.றயீஸ் தெரிவித்தார். நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் நிதியில் இருந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு எரிபொருள் செலவீனங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றுகையில்; பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் புகையிலை பாவனை தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் புகையிலை பாவனை தடைசெய்யும் அதிகாரம் சரியாக பயன்படுத்தப்பட்டதால் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து புகையிலை பாவனைக்காக செலவிடும் பல கோடி ரூபா பணத்தை மீதப்படுத்த முடிந்தது. எமது சமூகத்தை போதையில் வைத்திருக்க வேண்டிய தேவை சிலருக்கு இருக்கலாம். ஆனால் அதனை அனுமதிக்க முடியாது. எமது பிரதேசத்தில் பயன்படுத்தப்படாதுள்ள குழாய் கிணறுகள் டெங்கு பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் தாக்கத்தில் நிந்தவூர் 7வது இடத்தில் உள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்க முறைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து இதுவரை நிந்தவூர் பிரதேசத்தில் சுமார் ஆயிரம் நபர்களுக்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முன்பள்ளி பருவ மாணவர்களின் போசாக்கு விடயத்தில் கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்றார்.

நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் உப தலைவர் மௌலவி எம் ஐ எம் நியாஸ் (தப்லிகி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம் எஸ் எம் நிப்றாஸ், பொருளாளர் ஆதம்பாவா, நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் உறுப்பினரர்களான நிந்தவூர் ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் மௌலவி ஏ எம் ஆஷிக் அலி, நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொருளாளர் ஏ.எல்.அன்வர்டீன், உப தலைவர் ஏ.அஸ்வத்கான், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.அஸ்பர், கதீப் முஅத்தீன் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி எம்.ஏ.சி.எம்.அப்துல் ரகுமான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இதன்போது நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எரிபொருள் தேவைக்கான நிதி உதவி அனர்த்த முகாமைத்துவ அணியின் உப தலைவரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

நிந்தவூரில் போதைப் பொருள் பாவனை 50 வீதம் வரை குறைவடைந்தது. நிந்தவூரில் போதைப் பொருள் பாவனை 50 வீதம் வரை குறைவடைந்தது. Reviewed by Madawala News on October 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.