வரலாற்றில் முதல் தடவை கல்வி அமைச்சினால் தேசிய மீலாத் விழா கொண்டாட்டம்



வரலாற்றில் முதன் முறையாக கண்மணி நாயகம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி

வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாத் தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமான ஓர் தேசிய மட்ட கலாச்சார நிகழ்வு கல்வி அமைச்சினால் கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


இந்த நிகழ்வு கல்வி அமைச்சின் முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பணிகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் திரு T N மேஜர் நஸுமுதீன் அவர்களின் முயற்சியிலும் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் கல்வி அமைச்சினூடாக முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  வருடாந்தம் கொண்டாடப்படும் ஓர் தேசிய மட்ட விழாவாக இந்த விழா பிரகடனப்படுத்தப்பட்டமை  இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த ஒரு கௌரவமாகவும் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும் கருதப்பட வேண்டும் என்பது ஓர் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


வருடாந்தம் நடைபெறவிருக்கும் கல்வி அமைச்சின் இந்த வரலாற்று நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் முகமாக முதலாவது நிகழ்வு யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் கௌரவ வசீர் முக்தார் அவர்களின் கோரிக்கைக்கு இனங்க முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் பதியுத்தீன் முஹம்மத் அவர்கள் உருவாக்கிய கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பணிப்பாளர் திரு T N மேஜர் நஸுமுதீன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 


இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார் அவர்களும் சிறப்பு அதிதியாக முன்னாள் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வின் போது அரங்கேற்றப்பட்ட கலை நிகழ்வுகளில் கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயம், மடவலை மதினா தேசிய பாடசாலை, அல்மனார் தேசிய பாடசாலை ஹந்தஸ்ஸ, பரஹாதெனிய முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், குறுத்தலாக முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், மாத்தளை சாஹிரா வித்யாலயம், மாவனல்லை சாகிரா வித்யாலயம், பேருந்தை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலை, மக்களைப் பார்த்து முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வு கல்வி அமைச்சின் முஸ்லிம் தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கான பணிப்பாளர் கௌரவ T N நஸுமுதீனின் தலைமையில் கல்வி ராஜாங்க அமைச்சின் ஊடக செயலாளர் கௌரவ M R ஹஸீம்தீன் கௌரவ யட்டினுவர பிரதேச சபை உறுப்பினர் வசீர் முக்தார் மற்றும் பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஷிஹானா ரஹீம் அவர்களது வழிகாட்டலிலும் மிக சிறப்பாகவும் விமர்சியாகவும் நடைபெற்றது.


மேலும்  கண்டி மாநகர சபையின் தவிசாளர் நகர பிதா கௌரவ கேசர சேன நாயக்க உப தவிசாளர் கௌரவ இலாஹி ஆப்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான அல்ஹாஜ் லாபிர்  அல்ஹாஜ் ஹிதாயத் சத்தார், முன்னாள் நகர சபை உறுப்பினர் மற்றும் அல்ஹாஜ் நுஹ்மான் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

வரலாற்றில் முதல் தடவை கல்வி அமைச்சினால் தேசிய மீலாத் விழா கொண்டாட்டம் வரலாற்றில் முதல் தடவை கல்வி அமைச்சினால் தேசிய மீலாத் விழா கொண்டாட்டம் Reviewed by Madawala News on October 27, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.