இலங்கை பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம்.

 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


எஞ்சிய 30 வீதம் உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலை சீருடைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம். இலங்கை  பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 70 வீத சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம். Reviewed by Madawala News on October 03, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.