கோதுமை மாவு 13 ரூபாவால் அதிகரிப்பு... உள்நாட்டு பால்மா 400 கிராம் 100 ரூபாவினால் அதிகரிப்பு.



சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை

தொடர்ந்து கோதுமை மாவினை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவிற்கான விலையை 13 ரூபாவினால் அதிகரித்துள்ளன.


இதனால் வெதுப்பக உற்பத்தி பொருட்களில் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.


இதற்கமைய பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்கவுள்ளதாக நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்ததோடு, கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில் நாளை நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 950 ரூபாவாகும்.

அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றில் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,350 ரூபாவாகும்.
கோதுமை மாவு 13 ரூபாவால் அதிகரிப்பு... உள்நாட்டு பால்மா 400 கிராம் 100 ரூபாவினால் அதிகரிப்பு. கோதுமை மாவு 13 ரூபாவால் அதிகரிப்பு... உள்நாட்டு பால்மா 400 கிராம்  100 ரூபாவினால் அதிகரிப்பு. Reviewed by Madawala News on October 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.