நவம்பர் 02 ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க தயாரென சஜித் தெரிவிப்பு




சில எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தலைவர்கள் இணைந்து எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க தாம் தயாரென


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


காலையில் அரசாங்கத்தை தூற்றி விட்டு இரவில் அரசாங்கத்துடன் உணவருந்தும் தரப்பினர் எவரும் ஆர்ப்பாட்டத்துக்கோ அல்லது போராட்டத்துக்கோ தலைமைத்துவம் வகிப்பதற்கு வருவார்களானால் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.


போராட்டக்காரர்கள் தரப்பிலுள்ள சில தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிசக் கட்சி, தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற தரப்பினரின் சில பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி அல்லது அத்தோடு இணைந்த அமைப்புகள் எதுவும் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிய வருகிறது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷாக்களின் பாதுகாவலர் என தாம் ஏற்கனவே தெரிவித்த கூற்று தற்போது உண்மையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சியின் போது போராட்டக்காரர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அதேவேளை எதிர்வரும் 02ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை தற்போதுள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான அரசியல் சத்தியாக்குவதற்கும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நவம்பர் 02 ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க தயாரென சஜித் தெரிவிப்பு நவம்பர் 02 ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்க தயாரென சஜித் தெரிவிப்பு Reviewed by Madawala News on October 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.