மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராகும் லங்கா IOC



எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் கடந்த காலங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நாணய நெருக்கடி எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக நாணய கடிதங்களை விடுவிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுத்ததாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மேலும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.15 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராகும் லங்கா IOC மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால், எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராகும் லங்கா IOC Reviewed by Madawala News on September 25, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.