பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.



அதிக விலையை தொடர்ந்து பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சியால் விலை குறைப்பு?

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை 10-13% இனால் குறைக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதேவேளை,
மலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கட் வகைகளின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

07தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நாட்டு மக்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்க நாங்கள் உழைத்துள்ளோம்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் பணவீக்கச் சூழ்நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று.

மேலும் சமீபத்தில், உற்பத்தி செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் விலை குறைவாலும், உற்பத்தி செயல்முறையை பாதிக்கும் சில காரணிகள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளதாலும், அதன் நன்மையை எங்கள் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, எமது நிறுவனம் ஏற்கனவே பல பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என அறிவித்துள்ளது.
- jamhar


பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக  உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.