I

தேசிய பேரவையில் நம்பிக்கை வைத்து
செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்ப்போம்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற பாராளுமன்றமாக இருக்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற சபையாக தேசியபேரவை இயங்குவதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


தேசிய பேரவை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் (20) சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் நஸீர் அஹமட் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர்,

தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய பேரவை உருவாக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல கட்சிகளதும் எம்பிக்கள் இச்சபையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

எனவே, இச்சபையில் சகலரது கருத்துக்களும் உள்வாங்கப்படும். இதனால், இச்சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து சகலரும் செயற்பட வேண்டும். இதற்கான சிறந்த ஆலோசனைகளை அமையவுள்ள இத்தேசியபேரவை வரவேற்கும்.


எனக்கு முன்னர் பேசிய சில எம்பிக்கள், இதுவரை காலங்களும் அமைக்கப்பட்ட சபைகளால் எதுவும் நடக்கவில்லை என்ற நம்பிக்கையீனத்தில்
கருத்துக்களை வௌியிட்டனர். அவ்வாறன்று. கடந்தகாலங்களில் நடந்தவற்றை கருத்திற்கொண்டு இப்போது அமையவுள்ள தேசிபேரவையில் நம்பிக்கை இழக்கக் கூடாது.


இந்த உயரிய சபையில் பேசப்படாத விடயங்கள் எதுவுமில்லை. நாட்டில் நடந்த எல்லா விடயங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால், இவைகளில் 99 வீதமானவற்றுக்கு தீர்வுகள் காணப்படவில்லை.


 இனியாவது, அமையவுள்ள இத்தேசிய பேரவையால் இந்நிலைமைகளை மாற்ற முயற்சிப்போம். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இச்சபையினூடாக பெறுவதற்கு செயற்படல் அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்.
I I Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.