தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையும் உழ்ஹிய்யாஹ்வும்.



தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் உழ்ஹிய்யா பெறுமதியை அடிப்படை உணவு மற்றும் மருந்து தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமா என பலரும் கேட்கின்றார்கள்!

உழ்ஹிய்யா என்பது அல்குர்ஆனும் அல்ஸூன்னாஹ்வும் ஊக்குவிக்கும் மிகவும் பிரதானமான ஸுன்னா முஅக்கதாவான கிரியைகளில் ஒன்றாகும்!

"உழ்ஹிய்யா" விற்குரிய பெறுமதியை இடம் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப முன்னுரிமைப் படுத்தப்பட வேண்டிய அத்தியாவஷ்யத் தேவைகளுக்காக பயன்படுத்த முடியும் என்றும் ஆனால் அது இடர்காலத்தில் கடைமயாகின்ற நஃபக்கா ஆகவோ அல்லது ஸதகாவாகாவோ தான் கருதப்படும் அது "உழ்ஹிய்யா" ஆக மாட்டாது.

உழ்ஹிய்யா கிரியைகளுக்கான ஷரீஅத், ஹிக்மத்து, ஷரத்துகள் பர்ளுகள் பேணப்பட்டு மேற்கொள்ளப்படும் கிரியை மாத்திரமே உழ்ஹிய்யாஹ் என அழைக்கப்படும்.

(Please Subscribe : https://youtu.be/K6l7u5I70lY)

குர்பானி செய்யப்படுகின்ற விலங்குகளுக்கு மாற்றீடாக அல்லது உழ்ஹிய்யா பொதிகளுக்கு மாற்றீடாக உணவுப் பொதிகளை உழ்ஹிய்யா என்ற பெயரில் வழங்கக் கூடாது என்றும் காலப் போக்கில் பிரதானமான கிரியைகளில் ஒன்று குறைத்து மதிப்பிடப்பட்டு இல்லாமல் போய் விடக் கூடும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அடிப்படை உணவு வகைகள் மருந்து வகைகள் இல்லாத ஒரு நிலையில் மக்கள் பசி பட்டினி நோய்களினால் அவதிப்படுகின்ற அல்லது இறக்கின்ற ஆபத்தான நிலைவரின் குறிப்பிட்ட களநிலவரங்களை துறைசார் நிபுணர்களுடன் கவனமாக ஆராய்ந்து சன்மார்க்க அறிஞர்கள் அதற்குரிய முடிவுகளை எடுப்பார்கள்.

www.inamullah.net

உழ்ஹிய்யாவிற்கு உரிய நன்மைகள் கிடைக்குமா கிடைக்காமல் போய்விடுமா? என பலரும் கவலை கொள்கின்றார்கள், நிச்சயமாக  இவ்வாறான இடர்காலத்தில் சந்தர்ப்பங்களில் அல்லாஹ் ரஸூலின் ஷரீஅத்தின் வழிகாட்டலை ஆராய்ந்து அறிந்து அமுலாக்க எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கும்  பர்ழான ஸுன்னத்தான  செலவினங்களுக்கும் நிச்சயமாக அல்லாஹ்  இம்மை மறுமை கூலிகளை தரப் போதுமானவன்.

அதேவேளை "உழ்ஹிய்யா" என்பது இறைநியதியின்படி  ஏழை எளிய மக்களின் அடிப்படை உணவு மற்றும் போசாக்கு தேவைகளை ஈடு செய்கின்ற தர்மம் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பர்ழான சுன்னத்தான சன்மார்க்க கிரியைகள் கடமைகளை விட்டுக் கொடுப்பதில் உள்ள விதிவிலக்குகளை சலுகைகளை ஆராய்வதில் அவசரப்படாது ஒரு சமூகமாக பொருளாதார திட்டமிடல்களை நாம் மேற்கொள்தல் மேற்கொள்தல் கட்டாயமானது என்றும் ஷரீஆ சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.


விட்டுக் கொடுக்கமுடியுமான ஏனைய ஆசைகள் பேராசைகள் உள்ளாசங்கள் பொழுது போக்குகள் சுற்றுலாக்கள் சொத்து சேகரிப்புகள், வீண் விடயங்கள் போன்ற விடயங்கள் குறித்தும் சமூகம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை மற்றும் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் குறிப்பாக இனமத வெறி காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகள் உச்சத்தில் இருந்த பொழுதும்  கொவிட் 19 பெருந் தொற்று முடக்க நிலையிலும் நாட்டின் களநிலவரங்களைப் பொறுத்து சன்மார்க்க அறிஞர்கள் வழிகாட்ல்களை வழங்கியமை நாம் அறிவோம்.


இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் உழ்ஹிய்யாவிற்கு மாற்றீடாக உணவு மருந்துப் பொதிகள் உழ்ஹிய்யா எனும் கருதுகோலில் பெயரில் வழங்கப்பட முடியாது என்பதுவும் கால இட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஷரீஆ நிபுணர்களின் வழிநடத்தலின் பேரில் உழ்ஹிய்யாவிற்கான பெறுமதியை உயிர்காக்கும் அடிப்படை உணவு மருந்து தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதுவுமாகும்.

குறிப்பாக குர்பானி விலங்குகளின் பெறுமதி, தேவையுடையோரின் எண்ணிக்கை தேசத்தின் பொதுவான களநிலவரங்கள், சட்டதிட்டங்கள் போன்ற விடயங்கள் நிதானமான துறைசார் நிபுணத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட வேண்டும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻 04.07.2022
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையும் உழ்ஹிய்யாஹ்வும். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையும் உழ்ஹிய்யாஹ்வும். Reviewed by Madawala News on July 04, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.