ஆளுங்கட்சியில் உள்ள எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயார்..



ஆளுங்கட்சியில் உள்ள எம்.பிக்கள் பலர் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துள்ள எம்.பிக்கள் மற்றும் கடந்த காலங்களில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் எம்.பிக்கள் பலர் இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுவில் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலர் உள்ளடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வினாலும், ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது கட்சி மீதான முரண்பாடுகளினாலும் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.
Thamilan lk
ஆளுங்கட்சியில் உள்ள எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயார்..  ஆளுங்கட்சியில் உள்ள எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயார்.. Reviewed by Madawala News on July 31, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.