அனுமதி அளித்தால், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டுக்கு ஒரு இரவிலேயே தீர்வு என்னிடம் உள்ளது ; அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு.எரிபொருள், சீமெந்து, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை
 இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் திட்டத்திற்கு அனுமதித்தால் ஒரு இரவிலேயே தீர்வு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கேட்டுள்ளார்கள்.

வட மாகாணத்தில் இருக்கக்கூடிய உரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அதேபோன்று அத்தியாவசிய பொருட்களினுடைய பற்றாக்குறை நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அதே நேரத்தில், வடமாகாணமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் அதற்கு முகம் கொடுத்த வருகின்றது.

இந்த வகையில் எங்களது நீண்டகால திட்ட முன்மொழிவாக இந்தியாவிலிருந்த பொருட்களை இறக்குமதி செய்வதாகும். பாண்டிச்சேரி, காரைக்கால் அல்லது நாகபட்டணத்திலிருந்து நேரடியாக காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் ஊடாக விரைவாகவும், நியாயமான முறையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சூழலை உருவாக்குவோம்.

எரிபொருள், உரம், சீமெந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை நீக்கி வெகு விரைவில் மக்களிற்கு அது கிடைக்க செய்வோம். என தெரிவித்தார்.

நெல்லியடி நிருபர்
அனுமதி அளித்தால், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டுக்கு ஒரு இரவிலேயே தீர்வு என்னிடம் உள்ளது ; அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு. அனுமதி அளித்தால், எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டுக்கு ஒரு இரவிலேயே தீர்வு என்னிடம் உள்ளது ; அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு. Reviewed by Madawala News on June 17, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.