இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் செல்லும்குழு இன்று காலை மக்கா நோக்கி பயணம்.



(அஷ்ரப் ஏ சமத்)
முதலாவது ஹஜ் செல்லும் 50 பயணிகள் கொண்ட
 இன்று அதிகாலை செவ்வாய்க்கிழமை 28 பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து மக்கா பயணமானாா்கள்.


சவுதி அரசாங்கம் நாடுகளுக்கிடையே பகிா்ந்தளிக்கும் ஹஜ் கோட்டாமுறையில் இலங்கைக்கு 1,585 பேருக்கு ஹஜ் செல்வதற்கு சா்ந்தா்ப்பத்தினை வழங்கியிருந்தது.


 இலங்கையில் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நெறுக்கடியினாலும் வெளிநாட்டு நாணயம் டொலா் பிரச்சினையில் எதிா்நோக்கியிருந்தனா்.


இருந்தும் 960 பேர் ஹஜ் செல்வதற்காக தினைக்களத்தில் பதிவுசெய்துள்ளனா்.

இன்று செவ்வாய்க்கிழமை 28ஆம் திகதி முதலாவது ஹஜ் குழுவில் 50 பேர் அடங்குகின்றனா். அவா்களை அழைத்துச் செல்லும் குலோபல் ஹஜ் முகவரும“ முகவா்கள் அமைப்பின் தலைவருமான ரிஸ்மி றியால் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள ஹாஜிகளை மக்காவுக்கு அழைத்துச் செல்வதற்காக கட்டாா் ஏயாவேஸ், ஓமான் எயா வேஸ், ஜேசிரா, மற்றும் ஏயா அரேபியா ஆகிய விமானங்கள் ஓழுங்கு படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருட காலமாக நாட்டின் கொவிட் தொற்று காரணமாக இலங்கை ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சா்ந்தா்ப்பம் கிடைக்கவில்லை.

இம்முறை நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் . முஸ்லிம் சமய விவகார திணைக்களப் பணிப்பாளா் இப்றாகீம் அன்சாா், பிரதமா் , மத விவகார மற்றும் கலாச்சார அமைச்சா் விதுர விக்கிரமநாயக்க ஆகியோா்கள் இலங்கை ஹாஜ் செல்பவா்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்ததன் மூலம் இம்முறை ஹஜ் செய்வதற்கு சா்ந்தப்ப்ம் கிட்டியது. அதற்காக இறைவனுக்கும் நாட்டின் நில மக்காவுசெல்லும் இலங்கை ஹாஜிகள் பிராத்தனையில் ஈடுபடுவதாகவும் இலங்கையிலிருந்து இறுதி ஹஜ்குழு ஜூலை 3ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ்முகவா் குழு தலைவா் ரிஸ்மி றியால் தெரிவித்தாா்.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் செல்லும்குழு இன்று காலை மக்கா நோக்கி பயணம். இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் செல்லும்குழு இன்று காலை மக்கா நோக்கி பயணம். Reviewed by Madawala News on June 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.