தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்


தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. 


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கையை தடுப்பதற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை, உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல் தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல் Reviewed by True Nation on May 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.