இலங்கைக்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் - கல்முனையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு



(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
இலங்கை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார
 நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீன மக்கள் குடியரசு தொடர்ந்தும் உதவிகளை செய்து வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை நாட்டிற்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர்
கியூ சைன்கோன்ங் தெரிவித்தார்.

சீன நாட்டின் யுனான் மாநில மக்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிவாரணப் பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (26) கல்முனை மாநகரத்தின் ஆசாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சீன குடியரசு தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றும்போது, சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் உதவிகளை மேற்கொண்டு வருகிறது. நட்புறவு நாடு என்ற ரீதியில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கு தேவையான நிவாரணப் பணிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம். கல்முனைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள எனது முதலாவது விஜயம் இதுவாகும் இங்கு மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிவாரண பணி எல்லா பிரதேசத்திற்கும் எல்லா மக்களுக்கு கிடைக்கும். விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களாகிய உங்களின் வயிற்றுப் பாசிகளை நன்கு அறியமுடிகிறது. எதிர்காலத்தில் முடியுமான உதவிகளை இந்த மக்களுக்கு செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். எங்களை அன்பாக வரவேற்று உபசரித்த கல்முனை வாழ் மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் கியூ சைன்கோன்ங் மற்றும் அவருடைய பாரியார் ஜின் ஹுய்ன் ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கி வைத்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட அணியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு உதைபந்தாட்ட பாதணி மற்றும் விளையாட்டு உபகரணங்களையும்  சீனத் தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர  முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஸீக், கல்முனை மாநகரசபை பிரதி ஆணையாளர் ஏ.அஸீம், அம்பாறை மாவட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ.வாஹிட், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர்,  பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் உட்பட  கிழக்கு மாகாண ஆளுநரின் கௌரவ செயலாளர் , மாநகரசபை உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

இலங்கைக்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் - கல்முனையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு இலங்கைக்கு மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் - கல்முனையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவிப்பு Reviewed by Madawala News on May 26, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.