2nd Brain / 2ம் மூளை.



இன்று தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றது

 என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் மாணவர்கள் இரண்டாவது மூளையை தங்கள் அறிவை விருத்தி செய்ய உபயோகிக்கின்றனர்.


இரண்டாவது மூளை என்பது ஒரு மென்பொருள். இந்த மென்பொருளின் பெயர் ''Obsidian''.


இது மாணவர்கள் Notes எழுதும் போது எங்கள் மூளை எப்படி தகவல்களை சேகரிக்கின்றதோ அதைப்போல் சேகரிக்கும்.


அதை நாங்கள் மீட்கும் போதும் ஒரு Network அமைப்பை அமைத்து மனித மூளை எப்படி வேலை செய்யுமோ அதை போலே வேலை செய்யும்.


இந்த மென்பொருள் பல ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வெளிநாடுகளில் உபயோகிக்கின்றனர்.

 இது ஒரு இலவச மென்பொருளாகும்.


   இலங்கையில் உள்ள எத்தனை மாணவர்களுக்கு இன்று இதைப்பற்றித் தெரியும் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகும்.


 இலங்கையில் இன்று தொழில்நுட்ப பாடங்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறைவாகவே உள்ளது.

நாங்கள் தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே இன்றைய உலகத்தில் எம்மால் முன்னேறிச் செல்லமுடியும். 


    இலங்கையில் தரம் 10,11 மாணவர்களுக்கு I. C. T பாடம் உள்ளது.


இதை கற்பதன் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை யோசனை கிடைக்கின்றது .


ஆனால் இன்று அதிகமானவர்கள் இதை அறியாமலேயே இருக்கின்றார்கள்.

 தொழில்நுட்பத்தை கற்று தேர்ச்சி பெற்றாலே நாளைய உலகத்தில் எம்மால் முன்னேறிச் செல்லமுடியும் என்பது நிச்சயமான ஒன்றாகும்.

2nd Brain / 2ம் மூளை. 2nd Brain / 2ம் மூளை. Reviewed by Madawala News on May 08, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.