கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் ; பாராளுமன்றத்தில் பொது ஜன பெரமுன உறுப்பினர் முன் மொழிவு



கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை
பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவின் ஹாம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் கொத்துவை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.


கொத்து மட்டக்களப்பிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த டொக்டர் ஹேரத், தற்போது அதில் ஐஸ்கிரீம் கொத்து உட்பட பல வகைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்த அவர், அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்றார்.

இது நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன் இலங்கைக்கும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் ; பாராளுமன்றத்தில் பொது ஜன பெரமுன உறுப்பினர் முன் மொழிவு கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை  பெற வேண்டும் ; பாராளுமன்றத்தில் பொது ஜன பெரமுன உறுப்பினர் முன் மொழிவு Reviewed by Madawala News on March 08, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.