சரத் வீரசேகர மற்றும் சர்வதேச காவல்துறை தலைவருக்கிடையில் துபாயில் சந்திப்பு.



பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும், சர்வதேச காவல்துறை தலைவர் அஹமட் நஸார் அல் ராஸீட்டுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

துபாயில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதன் பின்னர், இந்து சமுத்திர வலயத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறித்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சர்வதேச காவல்துறை தலைவர், இந்து சமுத்திர வலயத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஒன்றிணைந்த பாதுகாப்பு குழு நியமிக்கப்படுவது பொருத்தமானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இணையவழி குற்றங்களை தடுப்பது மற்றும் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சரத் வீரசேகர மற்றும் சர்வதேச காவல்துறை தலைவருக்கிடையில் துபாயில் சந்திப்பு. சரத் வீரசேகர மற்றும் சர்வதேச காவல்துறை தலைவருக்கிடையில் துபாயில் சந்திப்பு. Reviewed by Madawala News on March 21, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.