சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.



இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள
 சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.



இந்த சந்திப்பில் பல இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொவிட்-19 நிவாரணம் மற்றும் கொவிட் பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சீன அரசு அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் இந்த சந்திப்பில் நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். Reviewed by Madawala News on January 09, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.