மத்திய மாகாணத்தில் 279 தமிழ் மொழிமூல அதிபர் சேவை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.



 இலங்கை பூராகவும் 4718 தமிழ் / சிங்கள மொழி மூல தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான

அதிபர் சேவை வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2022

 

🛑 இவற்றுள் மத்திய மாகாணத்தில் 279 தமிழ் மொழிமூல வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


🛑 இலங்கை ஆசிரியர் சேவையில் ஐந்து (05) - (06) வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றி திருப்திகரமான முறையில் நிறைவுசெய்து, அந்தக் காலக்கட்டத்தில் அனைத்து சம்பள அதிகரிப்புகளையும் பெற்ற ஆசிரியராக இருப்பின் இன்னும் கூறப்பட்டிருக்கும் சில தகமைகளுடன் அவர்களுக்கும் விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது!!!


விண்ணப்பங்கள்;

principalbranch2@gmail.com அல்லது sasese.moe@gmail.com  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு 26.01.2022 ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்!!


தகமைகள் இருக்கக்கூடிய அனைவரும் தவறாது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு மிக பணிவுடன் வேண்டிக் கொள்கின்றேன். 


🛑 தயவுசெய்து இந்த தகவலை அவதானிக்கக்கூடியவர்கள் குறிப்பிடப்பட்ட வெற்றிடத்துக்கு தகமைகளை கொண்ட உங்களுக்கு நெருங்கியவர்கள் இருப்பின் அவர்களுடன் இந்தத் தகவலை பரிமாறி அவர்களை உற்சாகப்படுத்தி விண்ணப்பிக்க வைக்கவும்!!🤝


நன்றி


Wazeer Mukthar | வசீர் முக்தார்

மக்கள் பிரதிநிதி

கண்டி மாவட்டம்


பின்வரும் தகைமைகளை பூர்த்தி செய்துள்ள இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களாக கடமையாற்றுகின்ற/ அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களும் இலங்கை அதிபர் சேவையின் தரம் IIIக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தெர்விற்கு தோற்றுவதற்குத் தகுதியுடையவர்கள்.


 1.0 கல்வி மற்றும் தொழில் தகுதிகள்


 (i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது தேசிய கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற இளங்கலை கல்விப் பட்டம் அல்லது


 (ii) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்ற பின்வரும் தகுதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்;


 (A) கல்வியில் முதுகலை டிப்ளோமா அல்லது பாடப் பாடத்தில் குறைந்தபட்சம் 50% பாடங்களைக் கொண்ட டிப்ளமோ


 (B) ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்;


 (C) தேசிய கல்வியில் டிப்லோமா



 (iii) கல்வியல் கல்லூரி தேசிய டிப்ளோமா / ஆசிரியர் பயிற்சி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்;


 குறிப்பு: -


 “ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்” என்பது கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது தொலைதூர கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத ஒரு நிறுவன ஆசிரியர் பயிற்சிப் பாடமாகும்.


 இது முறையாகப் படித்த மூன்றாண்டுகளுக்குக் குறையாத ஆசிரியர் பயிற்சிப் படிப்பு.



 1.2 அனுபவம்


 (A)  மேலே 1.0 (i) அல்லது 1.0 (ii) தகுதிகளைப் பெற்ற இலங்கை ஆசிரியர் சேவையில் ஐந்து (05) வருடங்கள்  சேவையாற்றி அவர் திருப்திகரமான காலகட்டத்தை நிறைவுசெய்து, அந்தக் காலக்கட்டத்தில் அனைத்து சம்பளப் படியேற்ங்களையும் பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும்


 (B)  இலங்கை ஆசிரியர் சேவையில் ஆறு (06) வருடங்கள் சுறுசுறுப்பான மற்றும் திருப்திகரமான சேவையை 1.0 (iii) க்கு மேல் தகைமையுடன் பூர்த்தி செய்து அக்காலப்பகுதியில் அனைத்து சம்பள அதிகரிப்புகளையும் பெற்ற அதிகாரியாக இருத்தல்.


அதிபர் சேவை தரம் 3 புள்ளிதிட்டம்;


1) 2022இற்கு முன்னைய கடமை நிறைவேற்று அதிபர்

*(7வருடம்x5=35புள்ளி)*


2) 2022ற்கு முன் அண்மித்த ஆண்டு கஷ்டபிரதேச சேவை

*(5வருடம்x6=30புள்ளி)*


3) MEd/MManag.

*(15புள்ளி)*


4) I.கல்விதுறை ஆராய்ச்சி

*(2ஆராய்ச்சிx3=6புள்ளி)* 


4) II.வெளியீடு/செயற்றிட்டம்

*(2வெளியீடு/செயற்றிட்டம்x2=4 புள்ளி)*


5) ஆங்கில மொழி தேர்ச்சி

*(5புள்ளி)*


6) ICT தேர்ச்சி

*(5புள்ளி)*


7) 2016-2020 வரை வருடத்துக்கு சேமித்த 5இற்கு கூடிய லீவுகளுக்கு

*(5வருடம்x2=10புள்ளி)*


8) பாடசாலை அபிவிருத்தியில் நேரடி பங்களிப்பு

*(3செயற்பாடுx2=6புள்ளி)*


9) மாணவர் திறன் வளர்ச்சி

*(3வருடம்x3=9 புள்ளி)*


10) கட்டமைப்பு நேர்முகப்பரீட்சை


அறிமுகம் - *4புள்ளி*


சமர்பிக்கும் திட்டம் - *4புள்ளி*


சமர்ப்பிக்கும் திறன் - *8புள்ளி*


விடய ஆய்வு - *5புள்ளி*


நேரமுகாமை - *4புள்ளி*


*(25புள்ளி)*


*மொத்தம் 150 புள்ளிகள்*


05. தகுதிகள்:


மத்திய மாகாணத்தில் 279 தமிழ் மொழிமூல அதிபர் சேவை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மத்திய மாகாணத்தில் 279 தமிழ் மொழிமூல அதிபர் சேவை  வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். Reviewed by Madawala News on January 12, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.