தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக M.A.M. பௌசர் நியமிக்கப்பட்டார்.



ஏ.பி.எம்.அஸ்ஹர் / சர்ஜுன் லாபீர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப்
 பேராசிரியராக எம்.ஏ.எம். பௌசர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.எம். பௌசர் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பதவியுயர்வைப் பெற்றுள்ளார்.
2020 .11.20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதிவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது இப்பதவியுயர்வின் மூலம் கலை கலாசாரப் பீடத்தின் இரண்டு பேராசிரியர்களைக் கொண்ட ஒரேயொரு துறையாக அரசியல் விஞ்ஞானத்துறை திகழ்கின்றமை விஷேட அம்சமாகும்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில் விஷேட கற்கையினைப் பூர்த்தி செய்த பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர் அத்துறையில் முதல் வகுப்புப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது மாணவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். தனது முதுகலைமாணிப் பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ள இவர், முரண்பாடு மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் மனித உரிமைகள் மற்றும் சமாதானக் கற்கையில் டிப்ளோமாப் பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக M.A.M. பௌசர் நியமிக்கப்பட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக M.A.M. பௌசர் நியமிக்கப்பட்டார். Reviewed by Madawala News on December 01, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.