திருகோணமலையில் சமய சகவாழ்வை கட்டியெமுப்புதல். !



(ஹஸ்பர் ஏ ஹலீம்)
சமய சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் என்ற
 கருப்பொருளின் அடிப்படையில் தேசிய சமாதானப் பேரவையினால் Serving Humanity Foundation ஒருங்கிணைப்புடன் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச  செயலகத்துக்கு உட்பட்ட சர்வமத தலைவர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக பிரதேச சர்வமத குழு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது.
 அமைப்பின் திறன் விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் டிசம்பர் மாதம் 04ம் திகதி பன்மைத்துவம் பற்றிய ஒரு நாள் பயிற்சிப்பட்டறை  காலை 9.00 முதல் மாலை 3.00 நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷெய்க்.ஆஷிக் அலாப்தீன்(நளீமி)  அவர்களின் தலைமையில் திருகோணமலை ஜூபிலி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக திரு. நிஸாந்த குமார (Freelance Trainer) அவர்களும், தேசிய சமாதானப் பேரவையின்  அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி குறித்த நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 43 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மகளிர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலையில் சமய சகவாழ்வை கட்டியெமுப்புதல். ! திருகோணமலையில் சமய சகவாழ்வை கட்டியெமுப்புதல். ! Reviewed by Madawala News on December 04, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.