ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர் ; வாழைச்சேனையில் ஞானசார தேரர்



 எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கை  ஜனாதிபதி மற்றும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஏன் மட்டக்களப்பு மாவட்டத்தில்

நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பரிந்துரைக் குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் கேள்வி எழுப்பினார்.


இன்று சனிக்கிழமை (04.12.2021) வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்வின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கடந்த முப்பது வருட காலமாக ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர். எனவே பல்வேறுபட்ட பிரச்சினைகளை திர்க்கவேண்டிய நிலை இருக்கிறது. யுத்த காலங்களில் வெளியேறியவர்கள் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடு பார்க்காமல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியேற்றப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலனிக் குழுவில் வழங்கப்படும் பரிந்துரைக்கு இன்று வாழைச்சேனைக்கு வந்தவுடன் திர்வு கிடைத்துள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.


ஞானசாரர் தேரர் மற்றும் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட பரிந்துரைக்குழுவினர் வாழைச்சேனைக்கு வருகை தந்திருந்தனர்.


வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது திம்புலாகல தேவாலங்கார தேரோ மற்றும் பிரதேச புத்திஜீவிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது பிரதேசத்தில் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைத்தனர். 


இதன்போது காணிப்பிரச்சினை, வீதி, பாலம், சட்டவிரோத மண் அகழ்வு காணி எல்லை தொடர்பான விடயங்கள் .சிங்கள குடியேற்றங்கள் பொளத்த மத பாடசாலை அமைத்தல் என பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர் ; வாழைச்சேனையில் ஞானசார தேரர் ஏழை மக்கள் தங்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் கண்ணீர் விட்டு வருகின்றனர் ; வாழைச்சேனையில் ஞானசார தேரர் Reviewed by Madawala News on December 05, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.