குறிஞ்சாக்கேணி அனர்த்தம்.. தலைமறைவான சந்தேகநபர்களை தேடி கைது செய்தது காவல்துறை. திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம்  விபத்துக்குள்ளான

சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய இருவர் உட்பட மூவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குறிஞ்சாக்கேணியில் நேற்று குறித்த மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து, கிண்ணியா காவல்துறையினரால் ஒருவரும், திருகோணமலை காவல்துறையினரால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.

குறிஞ்சாக்கேணி அனர்த்தம்.. தலைமறைவான சந்தேகநபர்களை தேடி கைது செய்தது காவல்துறை. குறிஞ்சாக்கேணி அனர்த்தம்..  தலைமறைவான சந்தேகநபர்களை தேடி கைது செய்தது காவல்துறை. Reviewed by Madawala News on November 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.