கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம்.



,நூருல் ஹுதா உமர், எம் . என் . எம். அப்ராஸ்  )

கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்று இன்று மதியம் (17) முன்னெடுக்கப்பட்டது.


கல்முனை  பொது பஸ் நிலையத்தில்  தற்போது மேற்கொள்ளப் படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இடை நிறுத்தக் கோரி கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் . எஸ் . எம். நிசார் தலைமைமையில்  கல்முனை பொது பஸ் நிலையத்தில்  குறித்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது



மாநகரத்தை கொச்சைப்படுத்தாதே , பஸ் தரிப்பிடத்துக்கு உதவாத புனர் நிர்மாணத்தை நிறுத்து ,மாநகரத்தின் பாவனைக்கு ஏற்ற பஸ் தரிப்பிடத் தை ஏற்படுத்து , கண் துடைப்பான தகுதியற்ற புனர் நிர்மாணம் தேவையில்லை ஆகிய வசனங்கள் அடங்கிய பாதாகையினை ஏந்தியவாறு  ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்

 


மேலும் இதன் போது கல்முனை பொலிஸாரின் தலையிட்டினால் ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன் ,இது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.  எஸ் . எம் .நிசார் அவர்களினால்  முறைப்பாடு செய்யப்பட்டது


இது தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் . எஸ் . எம் . நிசார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்


 நாடளாவிய ரீதியில் பஸ்  நிலையத்துக்கு பஸ்கள்  இங்கு வருகை தருகின்றன நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து செல்கின்றனர் நகரத்தை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி  தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் இந்த பஸ் நிலையத்தில் கல் பதித்து விடாதீர்கள் ஒன்று  கொங்கீரிட் இடுங்கள், ஆஸ்போட்  இடுங்கள், அல்லது காப்ட் இடுங்கள் என்று

நாம் பல தடவை சொன்னோம் ஆனால் இங்கு இதனை அவர்கள் கருத்திற் கொள்ளவில்லை ஆனால் இங்கு இடம்பெறும் அபிவிருத்தி ஒரு பொடுபோக்கு தனமான இந்த நகரத்துக்கே அருகதையற்ற ஒரு அருவருக்க தக்க ஒரு பஸ்  நிலையமாக இதனை மாற்றுவதற்கு, ஒரு பஸ் வந்து சென்றால் இங்கு பதிக்கப்படும் கற்கள் அனைத்தும் நத்தை கூட்டம் போல்  ஒதுங்கி கும்பம் ஆகின்ற நிலை உள்ளது இந்த மாநகர பஸ் நிலயத்தை கண்துடைப்பான அபிவிருத்தியை நாம்  மறுக்கிறோம் இதனை மக்களுக்கு ஒரு பிரயோசனமான பஸ் நிலைய மாக கட்டியேழுப்புவதற்க்குக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இது தொடர்பில் அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்   என்றார். 


M.N.M.AFRAS

கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம். கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on November 17, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.