சைவ அமைப்புகள் ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியினரு டன் சந்திப்பு



இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந் தன் உள்ளிட்ட சைவ அமைப்புக்களின்

குழுவினர் ஜனாதிபதியின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியினரு டன் சந்தித்துக் கலந்துரையாடினர்.


மேற்படி சந்திப்பு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வலம்புரிச் சொகுசு விடுதியின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள அரங்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.


ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர், செயலணியின் தமிழ் உறுப்பினர்களான திரு மதி. யோகேஸ்வரி பற்குணராசா, எஸ்.தயானந்தராசா உள்ளிட்ட ஜனாதிபதி செயலணியினருடனான குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, அம்பாறை, மட் டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சைவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்தச் சந்திப்பின் போது அரசியல மைப்பில் புத்த சமயத்திற்கு முன்பே லங்கையிலிருந்து வந்த சைவ சமயத்திற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும், மதமாற்றத் தடைச் சட் டத்தை உடனே நிறைவேற்ற வேண் டும், மாடுகள் கொலைத் தடைச் சட்டத்தை உடன் நிறைவேற்ற வேண் டும், திருக்கோயில்களில் உயிர்ப் பலித் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்ஆகிய நான்கு சட்டங்களையும் உடன் நிறைவேற்று மாறும் சைவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் கோரினர். அச் சட்டங்களின் தேவைகள் தொடர்பான வட,கிழக்கு மாகாணங்களின் கள நிலைமைக ளையும் அவர்கள் எடுத்துக் கூறினர்.


இதேவேளை, சைவர்களைச் சந்திப்பதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி செயலணி வடக்கே மீண்டும் வரும் என ஜனாதி பதி செயலணியின் தலைவர் குறித்த சந்திப்பில் உறுதியளித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சைவ அமைப்புகள் ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியினரு டன் சந்திப்பு சைவ அமைப்புகள் ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியினரு டன் சந்திப்பு Reviewed by True Nation on November 23, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.