பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் தொடர்பில் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் நேரடி கவனத்திற்க்கு



பானகமுவ அன்னூர் மத்திய கல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்த்தல் தொடர்பில் தீர்வுகாண பாடசாலை அதிபர் இர்ஷாட் , அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க அஷார்தீன் அவர்களின் தலைமையில் நெடுஞ்சாலை அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம கொரோடாவுமான  , குருணாகல் மாவட்டத் தலைவர் கௌரவ ஜொன்ஸ்டன் பெர்னான்டோ அவர்களின் கவனத்தற்கு மேற்படி விடயம் கொண்டு செல்லப்பட்டது. 

பானகமுவ அன்னூர் மத்திய கல்லூரியின் தேசிய பாடசாலை தரமுயர்த்தல் தொடர்பான இழுபறிக்கு சாதகமான தீர்வை பெற்றுத்தருவதாக கௌரவ அமைச்சர் மாநகரசபை உறுப்பினர் அஷார்தீன் மற்றும் குழுவிற்கு உறுதியளித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சில் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரதமரின் இணைப்புச் செயளாலர் பிரியன்த ரத்ணாயக்க ,ஆளுங்கட்சி பிரதம கொரோடாவின் ஊடக செயலாளர் சஜாத் முஹம்மத் ,அன்னூர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத் தலைவர் தொழிலதிபர் ரஸ்மி ,மற்றும் உறுப்பினர் தொழிலதிபர் சபான் சஹாப்தீன், தொழிலதிபர் அசாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் தொடர்பில் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் நேரடி கவனத்திற்க்கு பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தல் தொடர்பில் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் நேரடி கவனத்திற்க்கு Reviewed by True Nation on October 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.