மந்திரக் கதைகளில் கூறப்படுவதுபோல, உதய கம்மன்பிலவின் உயிர் தற்போது கிளியிடம் இருக்கிறது. - Madawala News Number 1 Tamil website from Srilanka

மந்திரக் கதைகளில் கூறப்படுவதுபோல, உதய கம்மன்பிலவின் உயிர் தற்போது கிளியிடம் இருக்கிறது.அரசாங்க நிர்வாக
அமைச்சுக்கு சொந்தமான,
வலு சக்தி அமைச்சர் 
உதய
கம்மன்பிலவின் இல்லத்தை,
ஒன்றரைக் கோடி ரூபாய்
செலவில், சி.பி.எஸ்.டி.எல்
நிறுவனம் திருத்தியமைப்பதாகத்
தெரிவித்த தேசிய மக்கள்
சக்தியின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்க, இந்நிறுவனத்தின்
தலைவராக நீதி அமைச்சர்
அலி சப்ரியின் சகோதரர் 
இருப்பதாகவும் தெரிவித்தார்.வலு சக்தி அமைச்சர் உதய 
கம்மன்பிலவுக்கு எதிரான
நம்பிக்கையில்லாப் பிரேரணை
மீதான இரண்டாவது நாள் 
விவாதத்தில் கலந்துகொண்டு 
உரையாற்றும்போதே அவர் 
மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து 
உரையாற்றிய அவர், ஐக்கிய 
மக்கள் சக்தியினரால் வலு 
சக்தி அமைச்சர் உதய 
கம்மன்பிலவுக்கு எதிராகக்
கொண்டுவரப்பட்டுள்ள
நம்பிக்கையில்லாப் பிரேரணை, 
ஊடகங்களுக்காகக்
கொண்டுவரப்பட்ட 
நம்பிக்கையில்லாப் பிரேரணை
என்றார்.
அரசாங்கத்தின் பிரதான
அணியான ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் தலைமைத்துவ
செயற்பாடுகளை, நிதி அமைச்சர் 
பசிலே முன்னெடுக்கிறார்.பொதுஜன பெரமுனவின் 
செயற்பாடுகள் தொடர்பில்
அரசாங்கத்தின் ஏனைய 
கட்சிக்குள் முரண்பாடுகள் 
காணப்படுகின்றன. 
மந்திரக் கதைகள் 
கூறப்படுவதுபோல, உதய 
கம்மன்பிலவின் உயிர் தற்போது  கிளியிடம் இருக்கிறது.
அந்த கிளி அண்மையில்
பாராளுமன்றத்துக்கு வந்தது.
எரிபொருள்களின் விலை
அதிகரிப்பு தொடர்பில்
அரசாங்கத்துக்குள்
பிரச்சினைகள் ஏற்பட்டன. பலர்
உதய கம்மன்பிலவுக்கு எதிராகக்
கருத்துக்களைத் தெரிவித்தனர்.


இப்பிரச்சினைகள்
அரசாங்கத்துக்குள்
வளர்ந்து வந்த நிலையில்,
நம்பிக்கையில்லாப் பிரேரணை
கொண்டுவரப்பட்டது.இதுவொரு முட்டாள்தனமான
தீர்மானம் எனவும் கடுமையாக
சாடினார்.


வலுசக்தி அமைச்சரின்
உத்தியோகப்பூர்வ இல்லம்
அரசாங்க நிர்வாக அமைச்சுக்கு
சொந்தமாக இருக்கிற
போதிலும், இந்த இல்லத்தை
திருத்தும் பணிகள் சி.பி.
எஸ்.டி.எல் நிறுவனத்துக்கு
வழங்கப்பட்டுள்ளது. நீதி
அமைச்சர் அலி சப்ரியின்
சகோதரரே இந்நிறுவனத்தின்
தலைவராக இருக்கிறார்.


நாட்டில் பல்வேறு
பிரச்சினைகள் காணப்படுவதாக
ஆளுந்தரப்பினர் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலையில்,
கோடியே 50 இலட்சம் செலவில்
இதனை திருத்த வேண்டுமா?
எனவும் அவர் வினவினார
மந்திரக் கதைகளில் கூறப்படுவதுபோல, உதய கம்மன்பிலவின் உயிர் தற்போது கிளியிடம் இருக்கிறது. மந்திரக் கதைகளில்  கூறப்படுவதுபோல, உதய  கம்மன்பிலவின் உயிர் தற்போது  கிளியிடம் இருக்கிறது. Reviewed by Madawala News on July 21, 2021 Rating: 5