விவசாய காணிக்குள் நடப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்..



ஹஸ்பர் ஏ ஹலீம்_

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கூறுகையில், எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும்,

விவசாயம் என்ற போர்வையில் அரச காணிகளில் நடைபெற்று வரும் காடழிப்பைத் தடுக்க தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.


இருப்பினும், சட்டப்பூர்வமாக்கல் உறுதி செய்யப்பட்டவுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.


நேற்று (07) காலை திருகோணமலை  குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தொடுவாய் பகுயில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களிடமே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


குச்சவெளி பிச்சமல் விகாரையில் நடந்த மத விழாக்களில் கலந்து கொள்ள சென்றபோது, அப்பகுதியில் வசிப்பவர்கள் இதுபோன்ற போராட்டத்தை நடத்துவதாக  ஆளுனருக்கு தகவல் கிடைத்தது.


ஆளுநர் பயணித்த வாகனத்தை நிறுத்த போராட்டக்காரர்கள் வீதியின் நடுவே வழிமறித்திருந்தார்கள்.  காரில் இருந்து இறங்கி அவர்களின் பிரச்சினை தொடர்பில்   வினவிய போது , ஆளுநர் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர்.


வன பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ஏன் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டன என்று ஆளுநரிடம்  கேட்டனர், , நீண்ட காலமாக  பயிரிட்ட நிலங்கள் இருந்ததால் விளம்பர பலகைகளை அமைத்த பின்னர் விளம்பர பலகைகள் இடப்பட்ட பகுதிகளில் நுழைய முடியாத சூழ்நிலை இருப்பதாகக் கூறினர். ...



ஆளுநர் பின்னர் விளம்பர பலகைகளுக்கு பின்னால் உள்ள வயல் நிலங்களை பார்வையிட்டார். சிலர் நீண்ட காலமாக நிலங்களுக்கு உரித்துப்படிவம் உள்ளதாக கூறினர்.


ஆளுநர், அதன் சட்டபூர்வமான தன்மையை சரிபார்த்த பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும்,விவசாயம் என்ற போர்வையில் காடழிப்புக்கு எந்தவிதமான காரணமும் இருக்காது என்றும் கூறினார்.


வனத்  திணைக்களத் துறையினருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக  ஆளுநர் முடிவு செய்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


விவசாய காணிக்குள் நடப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்..  விவசாய காணிக்குள் நடப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.. Reviewed by Madawala News on April 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.